/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவிலுக்கு நிரந்தர செயல் அலுவலர்
/
கோவிலுக்கு நிரந்தர செயல் அலுவலர்
ADDED : ஜன 10, 2026 07:38 AM

பல்லடம்: ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணி மேற்கொள்வதற்காக இடித்து அகற்றப்பட்டு நிலையில், பணிகள் நடக்கவில்லை. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பல்லடம், மாகாளியம்மன் கோவிலில், ஆளுங்கட்சியினர் தலையீட்டால், ஒன்றரை ஆண்டுகளாக, எந்த பணியும் நடக்கவில்லை.
இது தொடர்பாக விளக்கம் கேட்க செயல் அலுவலரை சந்திக்க முயன்றோம். கோர்ட் வேலை, அலுவலகக் கூட்டம் என்ற காரணத்தை கூறியபடி, அவர் அலுவலகம் வரவில்லை.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே, செயல் அலுவலர் நியமிக்கப்படாமல், பொறுப்பு அலுவலர்கள்தான் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களும், சரியாக வருவதில்லை.
இந்த சூழலில், பக்தர்களாகிய எங்கள் கோரிக்கையை நாங்கள் யாரிடம் கூறுவது என்று தெரியவில்லை. எனவே, நிரந்தர செயல் அலுவலரை பல்லடத்துக்கு நியமிக்க வேண்டும். கிடப்பில் உள்ள மாகாளியம்மன் கோவில் திருப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

