/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி
/
பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி
ADDED : டிச 06, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு, ஒரு வாரத்திற்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருமூர்த்திமலை பகுதிகளில், தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், பாதுகாப்பு கருதி, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல, கடந்த, 29ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஒரு வாரத்திற்கு பின், மலைப்பகுதிகளில் மழை குறைந்து, அருவியில் சீரான நீர் வரத்து நிலவியது. இதனால், நேற்று காலை முதல், அருவிக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதியளித்தது. அருவியில், சுற்றுலா பயணியர், பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.