ADDED : அக் 16, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அருகே மடத்துப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்றது.
திருவிழா கடந்த, 30ம் தேதி பூச்சாற்றுதல் காப்பு கட்டுகளுடன் துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, பெருமாளுக்கு அபிேஷகம் செய்தனர். அதன்பின், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அணிக்கூடை படைத்தல் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.