/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; 70 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
/
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; 70 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; 70 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா; 70 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
ADDED : மார் 29, 2025 11:50 PM
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்திபெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும் ஏப்., 8ம் தேதி நடக்கிறது.
குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் அவிநாசிடி.எஸ்.பி., சிவகுமார், தலைமையில் கோவில் அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், தினகரன், கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்தேரேஸ்வரன், முன்னாள் அறங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி சார்பில், கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக 20 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், தேர் செல்லும் பாதையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில், 70 இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்துதல், பக்தர்கள் குண்டம் இறங்க வரிசையாக செல்ல தடுப்பு அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ முகாம் அமைத்தல் என முடிவு செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில் இரண்டு தீயணைப்பு வண்டி நிறுத்தி தீயணைப்பு துறையையும், 3 நாட்கள் மும்முனை மின்சாரம் வழங்க மின் வாரியத்தையும், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு வசதிக்காக சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து துறையையும் கேட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது.