தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தலை, கையில் கட்டுடன் மனு

தலை, கையில் கட்டுடன் மனு

தலை, கையில் கட்டுடன் மனு


ADDED : பிப் 17, 2025 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம் சமூக சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, விபத்தில் படுகாயமடைந்ததுபோல் தனது தலை மற்றும் கைகளில் கட்டு போட்டு வந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நுாதன முறையில் மனு அளித்தார்.

அண்ணாதுரை கூறியதாவது:விபத்தில்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்றவேண்டும் என, விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்வது, ெஹல்மெட் அணிவது கட்டாயம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மாவட்ட நிர்வாகம்.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையோ தரமற்றவகையில் ரோடு போடுகிறது. பழுதான ரோடுகளில் பேட்ஜ் ஒர்க்கும் தரமின்றியே மேற்கொள்ளப்படுகிறது. டூவீலரில் செல்வோர், மிகவும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில், கால்நடை மருத்துவமனை முன் இரவோடு இரவாக வேகத்தடை அமைத்தனர். அந்த வேகத்தடையில், ஒரே நாளில், ஐந்து விபத்துக்கள் நடந்தன. இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை விபத்துகள் நடைபெற நெடுஞ்சாலைத்துறையே காரணமாக உள்ளது. விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, அரசு இழப்பீடு தரவேண்டும். தரமான ரோடுகள் போடப்படவேண்டும்; தேவையான இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கவேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, விபத்தில் படுகாயமடைந்ததுபோல் தலை மற்றும் கையில் கட்டு போட்டு வந்துள்ளேன்.---தலை மற்றும் கைகளில் கட்டுடன் மனு அளிக்க வந்த அண்ணாதுரை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us