ADDED : பிப் 08, 2025 06:29 AM

திருப்பூர் மாநகராட்சி 9 மற்றும் 15 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த அவிநாசிகவுண்டம்பாளையம், ஏ.வி.பி., லே அவுட் கிளை மற்றும் ஏ.எஸ்.எம்., கிளை மா.கம்யூ., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கோரிக்கை மனுவை நேற்று மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர். மனுவில், ''அவிநாசிக்கவுண்டபாளையத்தில் புதிதாக நல வாழ்வு மையம் கட்டி 4 மாதங்களாகிறது. மருத்துவர் நியமிக்கப்படாமல், திறக்கப்படாமல் உள்ளது. வரி வசூல் மையம் உள்ள பகுதிக்குச் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. புதிய கான்கிரீட் ரோடு போட வேண்டும்.விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். நான்காவது குடிநீர் திட்டத்தில் இணைப்புகள் வழங்க வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. வார்டு பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதியளித்தார்.