ADDED : ஜூன் 08, 2026 03:51 AM
அ நிறம் | அளவு
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் 10 பேர் இணைந்து அமைச்சர் அருண்ராஜிடம் அளித்த மனு:
விசாகா கமிட்டி விசாரணையில், பெண் பணியாளர்களைக் கண்ணியமற்ற முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மட்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளநிலை மறுவாழ்வு அலுவலர் இன்னும் அதே இடத்தில் தொடர்கிறார். மாறாக, புகார் அளித்த ஒப்பந்தப் பெண் பணியாளர் ஒருவர் சட்டவிரோதமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இளநிலை மறுவாழ்வு அலுவலரையும் உடனடியாக மாற்ற வேண்டும்; பெண் பணியாளரின் நீக்கத்தை ரத்து செய்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
