ADDED : ஜூலை 27, 2025 07:39 AM
திருப்பூர் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் (இ.எஸ்.ஐ.,) திட்டத்தில் இணைந்த தொழிலாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம், மாதம் தோறும் நடத்தப் படுகிறது.
'நிதி ஆப்கே நிகட் -2.0' என்ற பெயரில், மாதாமாதம், ஒவ்வொரு பகுதியில் நடத்தப்படுகிறது. முகாமில், பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., திட்ட சேவையில் உள்ள குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மண்டல வைப்பு நிதி கமிஷனர் - 2 அபிேஷக் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குறைகேட்பு கூட்டம், திருப்பூர் - பி.என்., ரோடு, மும்மூர்த்திநகரில் உள்ள, ஏ.கே.ஆர்., இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், நாளை (28ம் தேதி) நடக்கிறது.
பி.எப்., திட்ட சேவைகள் குறித்து, தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து முகாமில் தெரிவித்து, தீர்வு பெறலாம். முகாமில், மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர், நிறுவனங்கள், ஓய்வூதியதாரர்கள் மனு கொடுக்கலாம்.
யு.ஏ.என்., அல்லது வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண், இ.எஸ்.ஐ. (ஐபி) எண் ஆகியவற்றுடன் வந்து மனு கொடுக்கலாம்,' என்று தெரிவித்துள்ளார்.