/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலிப்பணியிடங்களை நிரப்ப மருந்தாளுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
காலிப்பணியிடங்களை நிரப்ப மருந்தாளுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப மருந்தாளுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப மருந்தாளுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2025 08:36 PM

உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனை முன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையாளர் ஜெயா வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் முகமது ஆரிப், மாவட்ட துணை செயலாளர் ஸ்மிதா கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அனைத்து மருத்துவமனைகளிலும், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கும் நிலையை தவிர்க்க, காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசுத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நிதித்துறையின் அனுமதி தேவை என்பதால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில், நுாற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநர், தலைமை மருந்தாளுநர், மருந்து கிடங்கு அலுவலர் பணியிடங்கள் காலாவாதியாகியுள்ளன.
இதனால், பிற காலிப் பணியிடங்களை நிரப்பும் போதும், இப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தவச்செல்வி நன்றி தெரிவித்தார்.

