/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் போன் பறிப்பு; 3 பேர் கைது
/
சிறுமியிடம் போன் பறிப்பு; 3 பேர் கைது
ADDED : ஜூன் 17, 2025 12:22 AM
காங்கயம்; காங்கயம், திட்டுபாறை தாமரைகாட்டுவலசை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்து விட்டு, கல்லுாரியில் சேர உள்ளார். டெய்லரிங் பயிற்சிக்காக சென்னிமலை வரை சென்று வருவது வழக்கம்.
நேற்று மதியம் திட்டுபாறை பஸ் ஸ்டாப் அருகே தனியாக நடந்து சென்ற சிறுமியை டூவீலரில் பின் தொடர்ந்து சென்ற தேனி, சின்னமனுாரை சேர்ந்த அஜித், 25, சக்திவேல், 25, வெள்ளகோவில் நடேசன் நகரை சேர்ந்த பாரதி, 25 ஆகிய மூவர், திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி, மொபைல் போனை பறித்து சென்றனர்.
செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கயம் போக்குவரத்து போலீசார் நிறுத்தி விசாரித்தனர். மூன்று பேர் மீது சந்தேகம் எழுந்த காரணத்தால், காங்கயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூன்று பேரை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.