/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிரி வலப்பாதையில் மது பாட்டில் குவியல்
/
கிரி வலப்பாதையில் மது பாட்டில் குவியல்
ADDED : அக் 19, 2024 11:39 PM

பல்லடம்: பல்லடம் அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி தினங்களில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு உள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்து வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கிரிவலப் பாதையில், ஏராளமான மது பாட்டில்கள் கிடக்கின்றன. குளம், குட்டைகள், பி.ஏ.பி., வாய்க்கால், விளை நிலங்கள் உள்ளிட்டவற்றில் அத்துமீறும் 'குடி'மகன்கள், மது பாட்டில்களை அங்கேயே வீசி செல்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. அத்துமீறும் 'குடி'மகன்கள் தற்போது கோவிலையும் விட்டு வைக்கவில்லை.
கோவில் கிரிவலப் பாதையில், மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். கோவிலின் புனிதம் காக்க, பக்தர்கள் பயன்படுத்தும் கிரிவலப் பாதையில், விளக்குகள் பொருத்தியும், கேமராக்கள் அமைத்தும், கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், கிரிவலப் பாதை 'குடி'மகன்களின் கூடாரமாகவே மாறிவிடக்கூடும்.