/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நகருக்கு வந்த முதல் ஜனாதிபதி
/
பின்னலாடை நகருக்கு வந்த முதல் ஜனாதிபதி
ADDED : அக் 14, 2024 11:47 PM
திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம்(நிட்மா), 2003ம் ஆண்டில், தனது 25 ஆண்டுகளை பூர்த்தி செய்து, வெள்ளி விழா கொண்டாடியது. பின்னலாடை தொழிலுக்கான நுழைவாயிலாக இருக்கும் 'நிட்டிங்' இயந்திரங்கள் தான், கோல்கட்டாவில் இருந்து, திருப்பூருக்கு வந்து புரட்சியை ஏற்படுத்தியது.
வெள்ளி விழாவை சிறப்பிக்கும் வகையில், அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் நேரில் பங்கேற்று, விழா மலரை வெளியிட்டார். திருப்பூர் தொழில்துறையினருடன் கலந்தாய்வு நடத்தினார்.
கலாம் விடுத்த சவால்; நிறைவேற்றிய திருப்பூர்
'நிட்மா' தலைவர் ரத்தினசாமி கூறுகையில்,''ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் வந்த போது, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 5,000 கோடி ரூபாயாக இருந்தது. திருப்பூருக்கு வந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையுடன் வந்திருந்த அப்துல்கலாம், ''விரைவில், 10 ஆயிரம் கோடி ரூபாயாக ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்தினால், மீண்டும் திருப்பூர் வருவேன்'' என்றார். அதேபோல், 2008ல், 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருந்த நிலையில், 'நிப்ட்-டீ' கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அப்துல்கலாம் பங்கேற்று வாழ்த்தியது இன்றும் நெஞ்சில் நீங்காமல் இருக்கிறது,'' என்றார்.