/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்
/
குழாய் சேதம்: வீணாகும் குடிநீர்
ADDED : நவ 05, 2024 06:19 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 58வது வார்டுக்கு உட்பட்டது வசந்தம் நகர். வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியாக உள்ள இப்பகுதிக்கு, மாநகராட்சி சார்பில் குடிநீர் சப்ளையாகிறது.
அங்குள்ள மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் நிரப்பி, வினியோக குழாய்கள் வழியாக வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த, 3 வாரம் முன் மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், தொட்டிக்கு குடிநீர் நிரப்பும் போது, உடைப்பு காரணமாக குடிநீர் ரோட்டில் சென்று பாய்ந்து வீணாகிறது. மேலும், தொட்டிக்கு நீர் நிரப்ப முடியாத நிலையும் நிலவுகிறது. வீட்டுக்குழாய் இணைப்புகளில் குடிநீர் வழங்க முடியாத நிலையில் கடந்த இரு வாரமாக லாரி மூலம் அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
குழாய் சேதம் குறித்து அப்பகுதியினர் தகவல் அளித்தும் அதனை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்ப டவில்லை. இந்நிலையில், தொட்டிக்கு நீர் நிரப்பும் வகையில், வந்த தண்ணீரும் தொட்டிக்குச் செல்லாமல் ரோட்டில் சென்று பாய்ந்து வீணானது. குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.