தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழாய் உடைப்பு; சாலை சேதம்; குப்பை தேக்கம்

குழாய் உடைப்பு; சாலை சேதம்; குப்பை தேக்கம்

குழாய் உடைப்பு; சாலை சேதம்; குப்பை தேக்கம்


ADDED : நவ 03, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீணாகும் தண்ணீர்

ராயபுரம் அடுத்த, சூசையா புரம் எட்டாவது வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- குணசேகரன், சூசையாபுரம்.

சாய்ந்த மின் கம்பம்

மண்ணரை, ரேவதி தியேட்டர் ரோட்டில், விழும் நிலையில், சாய்ந்தபடி மின்கம்பம் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும்.

- நடராஜன், தியாகி குமரன் காலனி.

கால்வாய் அடைப்பு

கரைப்புதுார் ஊராட்சி, முல்லை நகரில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் சுத்தம் செய்ய ஊழியர்கள் வருவதில்லை.

- வினு, முல்லை நகர்.

எப்படி நடப்பது?

கணபதிபாளையம், ஸ்ரீநகரில் சாலையில் மண் செறிந்துள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் சேறும், சகதியுமாக மாறி பாதசாரிகள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ரோடு அமைக்க வேண்டும்.

- சுப்ரமணி, கணபதிபாளையம்.

வாகனங்கள் தடுமாற்றம்

திருப்பூர், செல்வலட்சுமி நகரில் சாலை சேதமாகியுள்ளது; சரிவர மண் கொட்டாமல் குழியாக அப்படியே விட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

- லோகநாதன், செல்வ லட்சுமி நகர்.

n திருப்பூர், பல்லடம் ரோடு, தற்காலிக தினசரி மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் சாலை சேதமாகியுள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறு கின்றனர்.

- முத்துக்குமரன், பல்லடம் ரோடு.

வழிநெடுகக் குப்பை

பல்லடம், வடுகபாளையம் புதுார், திருவள்ளுவர் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். வழிநெடுகக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ஏசுதுரை, திருவள்ளுவர் நகர்.

இங்கேயா கொட்டுவது?

திருப்பூர், பூ மார்க்கெட் வீதி பின்புறம் குப்பை கொட்ட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்திலேயே, வியாபாரிகள் குப்பை கொட்டுகின்றனர்.

- தாமோதரன், திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us