/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் சீரமைப்பு பணி தாமதமாக துவங்கியது
/
குழாய் சீரமைப்பு பணி தாமதமாக துவங்கியது
ADDED : செப் 22, 2024 04:23 AM

அவிநாசி, : அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக இரண்டாம் திட்ட குடிநீர் குழாய் கடந்த இருபது நாட்களுக்கு முன்பாக சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீரின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் குழாய் ஓட்டை பெரியதாகி, பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அதில் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கின்றது. அந்தப் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் பள்ளி மாணவ, மாணவியரும் பஸ் ஸ்டாப்பில் நிற்க முடியாமல் தவிக்கின்றனர்.
தண்ணீர் தேங்கியுள்ளதால் பேருந்துகள் அந்த இடத்தில் நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்துகின்றனர். பயணிகள் சிரமப்படுகின்றனர். இரண்டாம் குடிநீர் திட்ட உதவி பொறியாளர் அன்பரசு, குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடக்கும் என்று உறுதி கூறினார். நேற்று குடிநீர் நிறுத்தப்பட்டு, குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.