/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றுப்படுகையில் பதிக்கப்படும் குழாய்கள்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க
/
ஆற்றுப்படுகையில் பதிக்கப்படும் குழாய்கள்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க
ஆற்றுப்படுகையில் பதிக்கப்படும் குழாய்கள்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க
ஆற்றுப்படுகையில் பதிக்கப்படும் குழாய்கள்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க
ADDED : டிச 03, 2024 05:58 AM
உடுமலை; கூட்டாற்றின் அருகில், பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அனுமதியற்ற குழாய்களை அகற்ற வேண்டும் என, தமிழக முதல்வருக்கு விவசாயிகள் மனு அனுப்பியுள்ளனர்.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில் இருந்து உருவாகும் பாலாறு மேற்கு நோக்கி செல்லும் போது, நல்லாறு இணைகிறது.
நல்லாறு காலனி செல்லும் ஆறுகள் இணைப்பு பகுதியில், சில கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆற்று படுகையில் இருந்து, ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு வரும் குழாய்கள், பல கி.மீ., தொலைவுக்கு பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆற்றுப்படுகையில் இருந்து முறையான அனுமதி பெறாமல், குழாய்கள் பதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழக முதல்வருக்கு அப்பகுதி விவசாயிகள் அனுப்பியுள்ள மனு: நல்லாறு, கூட்டாறு உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் இருந்து குழாய் பதித்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.
குழாய் பதிப்பதற்கு வருவாய்த்துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால், முறையான அனுமதி பெறாமல், குழாய் பதித்துள்ளனர். புதிதாக குழாய் பதிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கூட்டுக்குடிநீர் திட்டங்களும், ஆற்றுப்படுகையில் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கும். ஊராட்சிகளின் பெயரிலும் குழாய் பதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, உடுமலை தாசில்தார் தலைமையில், வருவாய்த்துறையினர் சிறப்புக்குழு அமைத்து, முழுமையாக ஆய்வு செய்து அனுமதி இல்லாமல் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.