ADDED : ஜன 29, 2024 12:02 AM

ஆக்கிரமிப்பு
திருப்பூர், காங்கயம் ரோடு, சி.டி.சி., டிப்போ துவங்கி, வேலன் ஓட்டல் ஸ்டாப் வரை நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- சபீஸ், காங்கயம் ரோடு.
ஆபத்து
திருப்பூர், துரைசாமிபுரம் முதல் வீதியில் மின்கம்பிகளுக்கு நடுவே, மரக்கிளைகள் பயணிக்கின்றன. மின்விபத்து அபாயம் உள்ளதால், மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
- சாந்தி, துரைசாமிபுரம். (படம் உண்டு)
தடுமாற்றம்
திருப்பூர் எஸ்.வி., காலனி மெயின் ரோட்டில் மின்கம்பம் மாற்ற குழி தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. வளைவில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.
- தீனா, எஸ்.வி., காலனி. (படம் உண்டு)
இருள்மயம்
திருப்பூர் வடக்கு, குருவாயூரப்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில், தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- ஜெயகணேஷ், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)
'ஆறு'
திருப்பூர், கல்லாங்காடு மெயின் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஆறு போல் வழிந்தோடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- கார்த்திகேயன், கல்லாங்காடு. (படம் உண்டு)
சேதம்
திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, காமராஜர் ரோட்டில் குழாய் உடைந்து, தண்ணீர் சாலையில் வீணாகிறது. சாலை சேதமாகிறது.
- சங்கர் சதீஷ், காமராஜர் ரோடு. (படம் உண்டு)
தொல்லை
திருப்பூர், 23வது வார்டு, வ.உ.சி., நகர் 4வது வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- ராம்குமார், வ.உ.சி., நகர். (படம் உண்டு)
ரியாக் ஷன்
அகற்றம்
திருப்பூர், போயம்பாளையம் - குருவாயூரப்பன் நகர் ரோட்டில் மின்கம்பத்தை சுற்றியும் முட்புதர், செடிகள் படர்ந்து இருந்தது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், மின் வாரியம் செடிகளை முழுமையாக அகற்றி விட்டது.
- ஜெயகணேஷ், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)
திருப்பூர், கணக்கம்பாளையம் பிரிவு நால்ரோட்டில் தெருவிளக்கு பகலிலும் எரிகிறது என 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மறுநாளே விளக்கு அணைக்கப்பட்டு விட்டது.
- நமசிவாயம், கணக்கம்பாளையம் பிரிவு. (படம் உண்டு)