/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த திட்டம்; நேற்று முதல் பணி துவக்கம்
/
நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த திட்டம்; நேற்று முதல் பணி துவக்கம்
நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த திட்டம்; நேற்று முதல் பணி துவக்கம்
நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த திட்டம்; நேற்று முதல் பணி துவக்கம்
ADDED : நவ 28, 2024 05:52 AM

உடுமலை; உடுமலை நகராட்சியில், நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், கருத்தடை மேற்கொள்ளும் பணி துவங்கியுள்ளது.
உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளிலும், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதோடு, பொதுமக்களை கடிப்பது, வாகனங்களை துரத்தி, விபத்துக்களை ஏற்படுத்துவது என பெரும் பிரச்னையாக இருந்தது.
தெரு நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, தற்போது தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி முழுவதும் சுற்றி வரும் தெரு நாய்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், 453 நாய்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனம் வாயிலாக, ஒரு நாய்க்கு, தலா, ரூ.1,650 வீதம், 453 நாய்களுக்கு, ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல், தெரு நாய்களை பிடித்து கருத்தடை மேற்கொள்வது மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
ஒவ்வொரு பகுதி வாரியாக, தனியார் தொண்டு நிறுவனத்தினர் சென்று, தெரு நாய்களை வாகனங்கள் வாயிலாக பிடித்து வந்து, ராஜேந்திரா ரோடு, மாட்டுத்தொழுவத்தில் அமைந்துள்ள, கருத்தடை மையத்தில் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
கால்நடை டாக்டர் வாயிலாக, நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டு, மூன்று நாட்கள் உணவு கொடுத்து பராமரிக்கப்படும்.
அதன் பின்னர், பிடித்த இடத்திலேயே விடுவிக்கப்படும்.
நேற்று துவங்கி இப்பணி, தினமும், 25 நாய்கள் வீதம் கருத்தடை மேற்கொள்ளப்படும். வரும், டிச., 15 வரை கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்படும்.
அதே போல், ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்ட நாய்களும் பிடிக்கப்பட்டு, வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்நாட்களில், வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்போரும், நகராட்சி மாட்டுத்தொழுவதற்கு அழைத்து வந்து, இலவசமாக வெறி நோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
நகராட்சி மட்டுமின்றி, அருகிலுள்ள ஊராட்சிகளிலிருந்தும் நாய்கள் உள்ளே நுழைவதால், அவற்றையும் பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும், என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.