/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்திப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரம்; சென்டர்மீடியன் வைக்க திட்டம்
/
சந்திப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரம்; சென்டர்மீடியன் வைக்க திட்டம்
சந்திப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரம்; சென்டர்மீடியன் வைக்க திட்டம்
சந்திப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரம்; சென்டர்மீடியன் வைக்க திட்டம்
ADDED : மார் 19, 2024 12:45 AM

உடுமலை;ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு, திருமூர்த்திமலை ரோட்டில், சந்திப்பு மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதி அணை, மறையூர், மூணாறு செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
போடிபட்டி அருகே, வாளவாடி மற்றும் குரல்குட்டை கிராம இணைப்பு ரோடுகள், திருமூர்த்திமலை ரோட்டில் இணைகிறது. இப்பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சந்திப்பு பகுதி மேம்பாடு செய்யும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கருத்துரு அனுப்பப்பட்டது.
அதன்படி, ரோடு சந்திப்பு விரிவாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி, டிச., மாதத்தில், பணிகள் துவங்கியது.
இத்திட்டத்தில், திருமூர்த்திமலை ரோடு, குறிப்பிட்ட துாரம் விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர்மீடியன் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்ததால், அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இதையடுத்து தற்போது, சந்திப்பு மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், தார்ரோடு அமைத்ததும், சென்டர்மீடியன் அமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

