/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்
/
அவிநாசி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்
ADDED : டிச 18, 2025 07:55 AM
திருப்பூர்: 'அவிநாசி - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிப்பு பணி நடந்து வரும் நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும்' என, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் வரை, 31.8 கி.மீ. நீளத்துக்கு சாலை புனரமைப்பு பணி நடந்து வருகிறது. 'ஒரு முறை பராமரிப்பு' என்ற அடிப்படையில், சாலையை செப்பனிடுவது மட்டுமின்றி, அடுத்த ஐந்தாண்டுக்கு இந்த சாலையை பராமரிக்கும் பொறுப்பையும், கான்ட்ராக்ட் நிறுவனத்தினரே ஏற்பர்.
இச்சாலை, 18 மீட்டர் அகலம் கொண்டது; சாலையின் இடது, வலது என, தலா, 9 மீட்டர் வீதம், மொத்தம், 18 மீட்டர் அகலம் கொண்டது. செட்டிபாளையம் நகரப்பகுதியில் மட்டும், சற்று அகலம் குறைவாக இருக்கும். சாலையின் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள, கடைகள் மற்றும் கடைகளின் வியாபார பொருட்களை அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும், என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாக எல்லையில், நெடுஞ்சாலை உள்ள நிலையில் அவர்களது ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
ஆக்கிரமிப்பை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம்.

