/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொள்ளையடிக்க திட்டம்; போலீசில் சிக்கிய வாலிபர்
/
கொள்ளையடிக்க திட்டம்; போலீசில் சிக்கிய வாலிபர்
ADDED : அக் 16, 2024 10:42 PM

பல்லடம் : கோவையில் இருந்து பல்லடம் நோக்கி பைக்கில் வந்த மூன்று ஆசாமிகளை, காரணம்பேட்டையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தி விசாரிக்க முயன்றனர். பைக்கை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால், சந்தேகம் அடைந்த போலீசார் பின் தொடர்ந்தனர்.
கே.என்.புரம், லட்சுமி மில் அருகே உள்ள காட்டுப் பகுதியில், பைக்கை கீழே போட்டு விட்டு, மூவரும் தப்பினர். பைக்கை கைப்பற்றிய போலீசார், மூவரையும் தேடிவந்தனர். நேற்றுமுன்தினம், புதுக்கோட்டையை சேர்ந்த கலியபெருமாள், 23 என்பவரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ஆயுத பூஜையை முன்னிட்டு, பொதுமக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பர் என்பதால், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன், மூன்று பேரும் இரும்பு ராடுடன் பல்லடம் நோக்கி வந்துள்ளனர். கலியமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தேடி வருகிறோம்,' என்றனர்.
கலியபெருமாள் மீது, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் ஸ்டேஷனில், கொலை, கஞ்சா கடத்தல், கொலை முயற்சி என, 5 வழக்குகள் உள்ளன.