/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பஸ் ஸ்டாப் அமைக்க திட்டம்
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பஸ் ஸ்டாப் அமைக்க திட்டம்
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பஸ் ஸ்டாப் அமைக்க திட்டம்
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பஸ் ஸ்டாப் அமைக்க திட்டம்
ADDED : ஜன 24, 2025 03:25 AM

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தும் பணி, 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ், 2023 செப்., முதல் நடந்து வருகிறது.
கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு, மேற்கு மற்றும் கிழக்கு புறம், இரண்டு பிளாட்பார்ம்களை விரிவுபடுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. தற்போது, குமரன் நினைவிடம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பை, ரயில்வே ஸ்டேஷன் முன் பகுதிக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. பஸ் நிற்குமிடத்தை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியிடம் கலந்து ஆலோசித்து மாற்றம் செய்ய, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முதல்கட்டமாக, ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் வளைவாக உள்ள நுழைவு வாயில் வளைவு இரண்டும் இடிக்கப்பட்டு, நேராக ஸ்டேஷனுக்குள் வாகனங்கள் பயணிகள் வர ஏதுவான வகையில் மாற்றப்பட உள்ளது. பழைய டூவீலர் ஸ்டாண்ட் அருகே மேற்கு புற நுழைவு வாயிலில் இதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. பிப்., இறுதியில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள கிழக்கு புற நுழைவு வாயில் வளைவு இடிக்கப்பட்டு, நேராக கட்டப்பட உள்ளது.
சேலம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் பஸ் ஸ்டாப் மற்றும் டூவீலர் ஸ்டாண்ட் இருப்பதால், ஒரு தெளிவான காட்சி ('வ்யூ') திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இல்லை. பஸ் விட்டு ஸ்டாப்பில் இறங்கும் பயணிகள் நேராக ஸ்டேஷனுக்குள் வர முடியாமல், சில மீட்டர் துாரம் நடந்து சென்று பின் வர வேண்டியுள்ளது. முன்புறம் உள்ள ஸ்டாப்பை ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதிக்கு மாற்றினால், பயணிகள் எளிதில் ஸ்டேஷனுக்குள் நுழைய முடியும். ரயில் விட்டு இறங்குவோர் வெளியேறவும் முடியும்; நெரிசல் குறையும். பஸ் ஸ்டாப் இடமாற்றத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை செய்யும் வகையில், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.