/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலை தவிர்க்க திட்டமிடல் தேவை!
/
நெரிசலை தவிர்க்க திட்டமிடல் தேவை!
ADDED : டிச 17, 2024 09:52 PM
உடுமலை; நகரில் நிரந்தர நெரிசல் நிலவும் ஐஸ்வர்யா ரோடு சந்திப்பு பகுதியில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
உடுமலை நகரின் மையப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. நகரின் முக்கிய ரோடுகள் மற்றும் மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையில், இணையும் சந்திப்பு பகுதிகளில், நெரிசல் நிரந்தரமாக உள்ளது.
குறிப்பாக, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது.
இதே போல், பஸ் ஸ்டாண்டில் இருந்து பழநி நோக்கி செல்லும் ரோட்டில், ஐஸ்வர்யா நகர் ரோடு சந்திப்பில், அதிக பிரச்னைகள் ஏற்படுகிறது.
சென்டர் மீடியன் இடைவெளியில், 'யு' டர்ன் எடுக்கும் வாகனங்களுக்கு போதிய இடமில்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும், வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
தாறுமாறாக திரும்பும் வாகன ஓட்டுநர்களால், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சந்திப்பு பகுதியில், மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி, போக்குவரத்து போலீசார் ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.