/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை முறை விவசாய விளைபொருட்களுக்கு அங்காடி விரைவில் அமைக்க திட்டம்
/
இயற்கை முறை விவசாய விளைபொருட்களுக்கு அங்காடி விரைவில் அமைக்க திட்டம்
இயற்கை முறை விவசாய விளைபொருட்களுக்கு அங்காடி விரைவில் அமைக்க திட்டம்
இயற்கை முறை விவசாய விளைபொருட்களுக்கு அங்காடி விரைவில் அமைக்க திட்டம்
ADDED : மே 15, 2025 11:40 PM
உடுமலை, ; இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை, விற்பனை செய்ய உடுமலையில் சிறப்பு அங்காடி அமைக்கப்படும் என, வேளாண் வணிக துணை இயக்குனர் தெரிவித்தார்.
தமிழக அரசு, இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு இயற்கையில் விளைவித்த பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையிலும், 50 இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள் அமைக்கப்படுகிறது.
அவ்வகையில், சிறப்பு அங்காடிகள், நுகர்பொருள் வாணிபக் கழகம், பூமாலை வணிக வளாகம், நகராட்சி, ஊராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கட்டடங்களில் அமைக்க அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறையில், பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் சான்று பெற்று, சிறப்பான முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர்.
அவர்கள், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதோடு, அதற்குரிய விலையும் கிடைப்பதில்லை.
இந்நிலையில், அங்கக வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம், உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
இதில், இயற்கை விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், சிறப்பு அங்காடி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அங்கக வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், சிறப்பு அங்காடி உடுமலையில் விரைவில் அமைக்கப்படும், என, துணை இயக்குனர் தெரிவித்தார்.