/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு
/
கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு
ADDED : அக் 10, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வனத்துறை மற்றும் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில், முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். வனவர் சரண்யா, கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டு துவக்கிவைத்தார்.
கல்லுாரி வளாகத்தில், வேம்பு, அரசு, ஆலமரம், புங்கை மரம், நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகை, 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.