/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாம்படை குட்டையில் 500 பனை விதை நடவு
/
பாம்படை குட்டையில் 500 பனை விதை நடவு
ADDED : செப் 01, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; கிராமிய மக்கள் இயக்கம் மற்றும் பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் சார்பில், ஞாயிறுதோறும் திருப்பூர் வடக்கு பகுதி ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளில் பனை விதை நடப்பட்டு வருகிறது.
நேற்று தொரவலுார் ஊராட்சி, மூங்கில்பாளையம் பாம்படை குட்டையில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. குட்டையின் கரையோரம் 500 பனை விதைகள் நடப்பட்டன. கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.