ADDED : அக் 24, 2024 11:57 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, ஒன்பதாவது வார்டு லட்சுமி நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லை. கழிவுநீர் அனைத்தும் வெங்கமேடு பிரதான சாலையில் தேங்கி வருகிறது.
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மழை நேரங்களில் மழை நீருடன் கழிவுநீர் ரோட்டில் குளம்போல் தேங்கி விடுகிறது. ரோட்டில் வாகனம் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
ரோட்டில் தேங்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்துவோம் என மா.கம்யூ., கட்சியினர் அறிவித்துள்ளனர்.
