/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரங்கபாளையத்தில் 1,150 மரக்கன்று நடவு
/
ரங்கபாளையத்தில் 1,150 மரக்கன்று நடவு
ADDED : நவ 06, 2025 04:54 AM

திருப்பூர்: 'வெற்றி' அறக்கட்டளையின், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 10 திட்டங்களில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்க்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, 11வது திட்டத்தில், மூன்று லட்சம் கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 2.35 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மழைப்பொழிவு பரவலாக இருப்பதால், விவசாய நிலங்களில், அரியவகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விவசாயிகள் விரும்புகின்றனர். அதன்படி, சின்னதாராபுரம் அருகே, ரங்கபாளையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
வீரமணி, சித்ரா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், மகோகனி - 600, தேக்கு - 200, மா - 150, ஈட்டி - 100, வேங்கை - 100,என, 1,150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இத்திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

