
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அவிநாசி முத்துச்செட்டிபாளையம் கிளை சார்பில் பனை விதைகள் நடும் விழா சாலையப்பாளையம் ரோட்டில் நடந்தது.
கிளைச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர் மணிகண்டன் துவக்கி வைத்தார். பன்னீர்செல்வம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஹனிபா, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.