ADDED : அக் 16, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: நெடுஞ்சாலைத்துறை சார்பில், பருவமழையையொட்டி, மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று புக்குளம் பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது.
உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், 'மரம் வளர்ப்போம்; மண் வளம் காப்போம்,' என்ற தலைப்பில், மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்ட துவக்க விழா நேற்று உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில் புக்குளம் பகுதியில் துவங்கியது. தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி, மரக்கன்று நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ச்சியாக, பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, சின்னாறு ரோடு, திருமூர்த்திமலை ரோடு, சுங்காரமுடக்கு- அம்மாபட்டி ரோடு, பெரியவாளவாடி உள்ளிட்ட ரோடுகளில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.