/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் இல்லா ரயில்வே விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பிளாஸ்டிக் இல்லா ரயில்வே விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மே 30, 2025 01:04 AM

திருப்பூர்,; தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் (திருப்பூர் வடக்கு), சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், 'பிளாஸ்டிக் இல்லா ரயில்வே ஸ்டேஷன்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரயில்வே ஸ்டேஷன் துணை மேலாளர் பண்டிட், சுகாதார அலுவலர் சூரியபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், ரேவதி, நவீன்குமார், திவாகர் இணைந்து, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, கலை நிகழ்ச்சி, பொம்மலாட்டம் நடத்தினர். துண்டு பிரசுரம், மஞ்சப்பை வினியோகிக்கப்பட்டது.