/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் வழித்தடம் மறிப்பு
/
பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் வழித்தடம் மறிப்பு
ADDED : அக் 30, 2025 11:01 PM

உடுமலை:  உடுமலை தங்கம்மாள் ஓடையில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தேங்கி, புதர் மண்டி காணப்படுகிறது. பருவ மழை துவங்கியுள்ள நிலையில் துார்வார வேண்டும்.
உடுமலை பகுதியிலுள்ள ஏழு குளங்களின் கசிவு நீர் மற்றும் மழை வெள்ள நீர் ஓடையாகவும், ஒட்டுக்குளத்திலிருந்து, உடுமலை நகரம் வழியாக, ராஜவாய்க்கால் பள்ளத்தில் இணைந்து, உப்பாறு ஓடையுடன் கலக்கிறது.
நீர் நிலைகள் மீதான அலட்சியம் காரணமாக, தற்போது கழிவு நீர் வெளியேற்றும் சாக்கடையாகவும், பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ஓடை துார்வாரப்பட்ட மண் தேங்கியும், செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டியும் காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மழை வெள்ள நீர் செல்ல வழியின்றி, வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக முழுமையாக தங்கம்மாள் ஓடையை துார்வார வேண்டும்.
மேலும், ஓடை மேம்பாட்டு பணியில், மீதம் உள்ள பகுதிகளில், கான்கிரீட் தளம், கரை மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

