/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு: கால்நடைகளுக்கும் பாதிப்பு
/
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு: கால்நடைகளுக்கும் பாதிப்பு
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு: கால்நடைகளுக்கும் பாதிப்பு
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு: கால்நடைகளுக்கும் பாதிப்பு
ADDED : ஏப் 14, 2025 10:03 PM

உடுமலை, ; உடுமலை அருகே, திறந்தவெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், சுகாதாரமும், கழிவுகளை உண்ணும் கால்நடைகள் பாதித்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.
உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகர எல்லை தாண்டியதும், ரோட்டின் இருபுறங்களிலும் பல்வேறு கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இத்தகைய கழிவுகள் கொட்டுவது தொடர்கதையாக இருந்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
பல நாட்கள் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, அப்பகுதியிலுள்ள கால்நடைகள் உண்கின்றன. இதனால், கால்நடைகளும் பாதிக்கின்றன.
தேங்கியுள்ள கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; கழிவுகளை தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டுநர்களும் அவதிப்படுகின்றனர்.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னை குறித்து உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.