ADDED : அக் 23, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சி, வேலப்பகவுண்டம்பாளையம் -- அய்யம்பாளையம் செல்லும் ரோட்டில், நீரோடை உள்ளது. இதில், தனியார் நிறுவனத்தினர், ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டியுள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''நீர்வழிப் பாதையில் தனியார் நிறுவனத்தினர் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டியுள்ளனர். நீர்வழிப் பாதை வழியாக மழை நீர் செல்வது தடைபடும். நீரோடையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

