/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில தடகள போட்டியில் 'பிளாட்டோஸ்' பள்ளி சாதனை
/
மாநில தடகள போட்டியில் 'பிளாட்டோஸ்' பள்ளி சாதனை
ADDED : ஜூலை 16, 2025 11:28 PM

திருப்பூர்; சென்னையில் நடந்த, மாநில அளவிலான, மூன்றாவது தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பிளாட்டோஸ் மாணவர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
போட்டியில், 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், 60 மீட்டர் தடை தாண்டுதலில், 9.27 நொடிகளில், சதாசிவம் என்ற மாணவன், இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், 12 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 'மிட்லி ரிலே'வில் பங்கேற்ற பிரியான்சுராஜ், சுதர்சன், சந்தோஷ் ஆகிய மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்று, வெண்கல பதக்கத்தை வென்றனர். பதக்கங்களை வென்ற மாணவர்களையும், பயிற்சியாளர்கள் சுரேஷ், சந்தோஷ், சரண்யா ஆகியோரை, தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், முதல்வர் ஸ்ரீகுமாரி, ஆசிரியர்கள் பாராட்டினர்.