ADDED : பிப் 10, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ஆண்டுதோறும் பிப். 9ம் தேதி, கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக பின்பற்றப்படுகிறது.
அதையொட்டி அரசு துறை அலுவலகங்களில், அரசு அலுவலர்கள் இதுகுறித்து உறுதிமொழி ஏற்பது வழக்கம். திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலத்தில் நேற்று காலை, கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதி மொழியேற்பு நடந்தது.
உதவி கமிஷனர் தங்கவேல்ராஜன் தலைமையில் அலுவலர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
