ADDED : நவ 24, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ பொன் சோழீஸ்வரர் கோவிலில் 'நலம்' அமைப்பின் சார்பில் உழவாரப்பணிகள் நேற்று நடந்தது. துாண், சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு வர்ணம் மற்றும் வெள்ளையடிக்கப்பட்டது; கற்சிலைகள், உற்சவ அலங்கார பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டன.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை 'நலம்' ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மேற்கொண்டார்.