
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர், 200க்கும் மேற்பட்டோர், காலை முதல், மாலை வரை, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர்கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தினர். கருவறை சுவர்கள், முன் மண்டபம், கற்துாண்கள், வசந்த மண்டபம், கொடிமரம், கதவுகள், 63 நாயன்மார்கள் கல் மண்டபம், கனகசபை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர்.
பூஜைக்கு பயன்படுத்தப்படும் பித்தளை மற்றும் செம்பு பொருட்கள் கழுவி சுத்தம் செய்யப்பட்டது; துணி வகைகள் சலவை செய்து கொடுக்கப்பட்டது. கோவிலின் மேற்கூரை பகுதியிலும் செடிகளை அகற்றி, துாய்மைப்படுத்தப்பட்டது.

