/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 வகுப்பு இயற்பியல் தேர்வு இனித்தது!
/
பிளஸ் 1 வகுப்பு இயற்பியல் தேர்வு இனித்தது!
ADDED : மார் 13, 2024 12:27 AM

திருப்பூர்:'நேற்று நடந்த, பிளஸ் 1 இயற்பியல் தேர்வு, எளிதாக இருந்தது' என, மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று நடந்த பிளஸ் 1 தேர்வில், அறிவியல் பிரிவில் இயற்பியல் தேர்வு நடந்தது; 14 ஆயிரத்து 69 மாணவர்கள் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். 13 ஆயிரத்து 995 பேர் தேர்வெழுதினர்; 74 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தனித்தேர்வர்களாக, 61 பேர் விண்ணப்பித்திருந்தனர்; இவர்களில், 38 பேர் தேர்வெழுதினர்; 23 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தேர்வு அனுபவம் குறித்து, நஞ்சப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வேடியப்பன் கூறுகையில், ''இயற்பியல் தேர்வில் 2, 3 மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தது; மற்ற வினாக்கள் எளிதாக இருந்தது. புக் பேக் வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன.தேர்வு கடினம் என்று சொல்வதற்கில்லை,'' என்றார்.
மாணவன் அபிேஷக் கூறுகையில், ''இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் உள்ளிட்ட கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தது; புத்தகம் முழுமையும் படித்திருந்தால், அதிக மதிப்பெண் பெறுவது எளிது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது,''என்றார்.
'பார்முலா' முக்கியம்
இயற்பியல் ஆசிரியர்கள் கூறுகையில், ''இயற்பியல் கேள்வித்தாள் சுலபமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தது. இரு மதிப்பெண் வினாவில் எளிமையான கணக்கீடு, அதாவது, 'பார்முலா' பயன்படுத்தி விடையளிக்கும் வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இயற்பியல் பாடத்தை பொறுத்தவரை, பார்முலா சார்ந்த கேள்விகளை முழுமையாக படிப்பதன் வாயிலாக 'சென்டம்' மதிப்பெண் பெற முடியும்,'' என்றனர்.

