ADDED : பிப் 23, 2024 11:38 PM

உடுமலை;பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், நேற்றுடன் நிறைவு பெற்றன.
பிளஸ், பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும் உடுமலை சுற்றுப்பகுதியில், மேல்நிலை பொதுத்தேர்வு வகுப்புகளுக்கு, இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 12ம் தேதி முதல் பிளஸ் 2க்கும், 19ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் செய்முறைத்தேர்வுகள் துவங்கின. இறுதிக்கட்டமாக செய்முறை தேர்வுகளும் நேற்றுடன் நிறைவு செய்யப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களுக்கு, நேற்று இறுதி செய்முறைத்தேர்வு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடந்தது. பத்தாம் வகுப்புக்கும் செய்முறை தேர்வு நடக்கவுள்ளது.