/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதிவேற்றம்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதிவேற்றம்
ADDED : பிப் 19, 2026 05:22 AM
திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் அறிவியல், கணினி அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கான செய்முறை பொதுத்தேர்வு கடந்த, 9ம் தேதி துவங்கியது.
உயிரியியல், வேதியியல், இயற்பியல், விலங்கியில், உயிர் வேதியியல், கணினி அறிவியல், மனையியல், ஊட்டசத்து வியல் மற்றும் உணவு மேலாண்மை உள்ளிட்ட பிரிவு மாணவ, மாணவியர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர்.
கடந்த 14ம் தேதியுடன் செய்முறை தேர்வுகள் நிறைவுற்றன. மாணவர் மற்றும் மதிப்பெண் விவரங்களை வரும், 23ம் தேதிக்குள் தேர்வுத்துறை இணைதளத்தில் பதிவேற்ற வேண்டுமென, புறத்தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வரும், 23ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன.

