தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளஸ் 2 மறு மதிப்பீடு

பிளஸ் 2 மறு மதிப்பீடு

பிளஸ் 2 மறு மதிப்பீடு


ADDED : ஜூன் 06, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 தேர்வு முடிவு மே, 8 ம் தேதி வெளியானது. இத்தேர்வெழுதிய வர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் விடைத்தாள் நகல் விண்ணப்பித்து பெற வேண்டும். பலர் நகல் கோரி விண்ணப்பித்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 4ம் தேதி) விடைத்தாள் நகல் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மறுமதிப்பீடு, மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நாளை (7ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மறுமதிப்பீடு பாடத்துக்கு 505 ரூபாய், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு, 305, இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது தரப்படும் ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிகளை அறிய முடியும் என மாவட்ட தேர்வுகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us