ADDED : டிச 25, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்திற்கான, 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடைமுறையை அமல் படுத்த வேண்டும் என, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து அந்த அமைப்புகள் சார்பில் நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகராட்சி சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வன்னியர் சங்க துணைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பா.ம.க., மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன், ரமேஷ், உள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

