ADDED : நவ 27, 2024 03:33 AM

திருப்பூர்; பா.ம.க., நிறுவனர் ராமதாசை அவதுாறாகப் பேசிய தமிழக முதல்வரைக் கண்டித்து திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம், தொழிலதிபர் அதானியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியது குறித்து, விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அவர் ராமதாஸ் குறித்து அவதுாறாகப் பேசியதாக, பா.ம.க., வினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து, திருப்பூரில் நேற்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகராட்சி சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சையது மன்சூர் தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பங்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.