/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதமர் பிறந்த நாள்; பா.ஜ.,வினர் ஆலோசனை
/
பிரதமர் பிறந்த நாள்; பா.ஜ.,வினர் ஆலோசனை
ADDED : செப் 08, 2025 11:11 PM

திருப்பூர்: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வரும், 17ம் தேதி சேவை வாரமாக கொண்டாட பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில செயலாளர் மலர்க்கொடி, சேவை வார பொறுப்பாளர் வேதநாயகம் மற்றும் மாவட்ட பொது செயலாளர்கள் அருண், வினோத் வெங்கடேஷ், மாவட்ட பொருளாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ் வகையில் திருப்பூருக்கு வர உள்ளார்.
இதையொட்டி, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்திந்து அழைப்பிதழ் வழங்கினர்.