ADDED : ஜன 01, 2024 12:11 AM
திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்து, 33 பூத்களில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி, 108வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதை தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் மாவட்டம் வாரியாக கட்சியினர் உரையை கேட்டுகும் வகையில் ஏற்பாடு செய்தனர். அவ்வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வினர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்து 33 பூத்களில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். அதில், கருவம்பாளையம் மண்டல், 79வது பூத்தில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அவிநாசி வட்டம், கணியாம்பூண்டி, வாய்த்தோட்டம் பகுதியில், பா.ஜ., அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் கணியாம் பூண்டி செந்தில் தலைமையில் பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' ஒளிபரப்பை 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பா.ஜ.,வினர் கேட்டனர்.