/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் மீது நடவடிக்கை காவல்துறைக்கு கண்டனம்
/
விவசாயிகள் மீது நடவடிக்கை காவல்துறைக்கு கண்டனம்
ADDED : டிச 23, 2024 11:50 PM
திருப்பூர், -திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிக்கை:
திருப்பூர் வடக்கு வட்டம், பொங்குபாளையம் கிராமத்தில் பாறைக்குழியில், மாநகராட்சியின் குப்பை, தரம் பிரிக்காமல் கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசடைகிறது; சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்ற புகாரை, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து முன்வைக்கின்றனர்.
பாறைக்குழியில் குப்பை கொட்ட வரும் வாகனங்களை சிறை பிடிப்போம் எனக்கூறி, பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை அமல்படுத்த கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில சட்ட விழிப்புணர்வு செயலாளர் சதீஷ்குமார், உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.அவரையும், விவசாயி ஸ்ரீதர் என்பவரும், போலீசாரால் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். சமூக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடும் விவசாயிகள் மீதான காவல் துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் திருப்பூர், வளர்ச்சியில் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.