sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : நவ 01, 2024 10:55 PM

Google News

ADDED : நவ 01, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேன் மோதி முதியவர் காயம்


கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. திருமுருகன்பூண்டி பஸ் ஸ்டாப்பில், சாலையோரம் நின்று கொண்டிருந்த பிக்கப் வேன் மீது, பஸ் மோதியது.

இதில், வேன் நின்ற இடத்தில் இருந்து சற்று துாரம் சென்று, பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த ஜெகநாதன் என்ற முதியவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பஸ் பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்தனர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் மோதி வியாபாரி பலி


ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சென்னிமலை, 50. விவசாயம் மற்றும் கடலை வியாபாரம் செய்து வந்தார். வியாபார விஷயமாக காங்கயம் சென்று விட்டு, பைக்கில் வீடு நோக்கிச் சென்றார். வட்டமலை அருகே, எதிரே வந்த ஒரு கார் மோதியதில், பலத்த காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

11 சவரன் மாயம்: போலீசில் புகார்


பல்லடம், சின்ன வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜூ 82, மனைவி லட்சுமி 74. மகன் மற்றும் மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக உள்ளனர். வயதான தம்பதியர் இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில், அக்., 29ம் தேதி வீட்டில் இருந்த, 11 சவரன் நகைகள் மாயமானது.

இது குறித்து தம்பதியர் அளித்த புகாரின் பேரில், வீட்டுக்கு தண்ணீர் கேட்டு வந்த ஒருவர் தான் நகைகளை திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us