பால் பண்ணை செயலாளர் தற்கொலை
காங்கயம், ஊதியூரை சேர்ந்தவர் ராஜி, 47. கடந்த, 28 ஆண்டுகளாக சிறுகனார் பால் பண்ணையில் செயலாளராக வேலை செய்து வந்தார். கடந்த, 45 நாட்களுக்கு முன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், மனமுடைந்து இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வேட்டுவழி காட்டிலுள்ள கோழி பண்டை தோட்டத்தில் வேப்பமரத்தில் துாக்குமாட்டினார். அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்குமாட்டி சிறுவன் தற்கொலை
திருப்பூர் பி.என்., ரோட்டை சேர்ந்தவர் கவுதம், 16; பனியன் தொழிலாளி. இவரின் சிறு வயதில் தந்தை இறந்தார். கடந்த, மூன்று ஆண்டுக்கு முன் தாய் இறந்தார். கடந்த, ஏழு மாதம் முன், அக்கா கணவர் இறந்தார். தொடர்ந்து, சமீப காலமாக சிறுவனுக்கு தலையில் கடுமையான வலி ஏற்பட்டு வந்தது. மனமுடைந்து இருந்த சிறுவன் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி பழுது: போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் நேற்று காலை வந்த டேங்கர் லாரி திடீரென மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்றது. லாரியை சரி செய்ய முயன்று, உடனடியாக முடியாத காரணத்தால் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீசார் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு கிரேன்களை அழைத்து வந்து பழுதான லாரியை துாக்கி அப்புறப்படுத்தினர்.

