ஒருவர் பலி
உடுமலை, பூளவாடியை சேர்ந்தவர் பாபு, 58. நேற்று தாராபுரத்திலிருந்து உடுமலைக்கு டூவீலரில் திரும்பி கொண்டிருந்தார். பொன்னாபுரம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர் மோதியது. படுகாயமடைந்த பாபு பரிதாபமாக இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை, பணம் திருட்டு
திருப்பூர், காங்கயம் ரோடு, காங்கயம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் சகுந்தலா, 60. உடல் நலம் சரியில்லாமல், மகளுடன் மருத்துவமனைக்கு சென்றார். பின், வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு பீரோவில் இருந்த, 5 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கணக்காளர் பலி
திருப்பூரை அடுத்த தாராபுரத்தை சேர்ந்தவர் சையத் சுகேல் அஹமத், 25; பனியன் நிறுவனத்தில் கணக்காளர். இவர் குண்டடம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த வேனின் பின்னால் கட்டுப்பாட்டை இழந்து டூவீலருடன் மோதினார். விபத்தில் படுகாயமடைந்த சையத் சுகேல் அஹமத் பரிதாபமாக இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.